சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

பாகிஸ்தான் ஆலய தாக்குதலுக்கு தீவிரவாத குழு பொறுப்பேற்பு

Quetta நகரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கபட்டதற்கு மதத்தலைவர்கள் கண்டனம் - EPA

18/12/2017 16:33

டிச.18,2017. பாகிஸ்தானின் சிந்து மாநிலத்திலுள்ள Quetta நகரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கபட்டு 9 பேர் உயிரிழந்துள்ளது குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், மதத்தலைவர்கள்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு தயாரித்துவரும் இக்காலத்தில், ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த ஏறத்தாழ 400 விசுவாசிகளிடையே நடத்தப்பட்ட இந்த மனித வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக பாகிஸ்தானின் சிந்து அரசு அறிவித்துள்ளது.

IS எனும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, பொறுப்பேற்றுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதலால் 9 பேர் உயிரிழந்து, 44 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி

18/12/2017 16:33