2017-12-21 16:03:00

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவின் கிறிஸ்மஸ் செய்தி


டிச.21,2017. வன்முறைகள், ஆபத்தான மோதல்கள், சமுதாய பாகுபாடு, அடிப்படை மனித உரிமைகள் மறுப்பு ஆகியவை நிறைந்துள்ள இவ்வுலகில், மீண்டும் ஒரு முறை, "கிறிஸ்து பிறந்துள்ளார்" என்ற செய்தி ஒலிக்கிறது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழா செய்தியில் கூறியுள்ளார்.

கான்ஸ்டான்டினோபிள் திருஅவையின் தலைவரான பார்த்தலோமேயு அவர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், 2018ம் ஆண்டு மனித உரிமைகள் வெளியிடப்பட்ட 70ம் ஆண்டு நிறைவுவது, சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையான அன்பு இறைவனிடமிருந்து வருகிறது, உண்மையின் மீது கொண்டுள்ள அன்பு, கிறிஸ்துவில் நாம் பெறும் சுதந்திரம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கருவிகளாக மதங்கள் இருக்கவேண்டும் என்ற கருத்துக்களை முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், தன் செய்தியில் விளக்கிக் கூறியுள்ளார்.

தொழிநுட்பத்தின் அடிப்படையில், நம் தொடர்புகள், பிரமிக்கச் செய்யும் அளவு வளர்ந்துள்ளது எனினும், நம் உண்மையான தொடர்புகள் குறைந்து வருவதால், பொது நன்மைக்கென அனைவரும் இணையும் ஆர்வமும் குறைத்து வருகிறது என்று முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.