2017-12-23 14:41:00

பாசமுள்ள பார்வையில் - கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா?


1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள், மனித சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பின. Bob Geldof, Midge Ure என்ற இரு இசைக்கலைஞர்கள் தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்தனர். எத்தியோப்பிய மக்களை மனதில் கொண்டு, முக்கியமாக, அங்கு பட்டினியால் இறக்கும் குழந்தைகளை மையப்படுத்தி, 'இது கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா?' "Do They Know It's Christmas?" என்ற கேள்வியை எழுப்பும் ஒரு பாடலை இவர்கள் இயற்றினர். 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த அந்தப்பாடல், மிகப்பெரும் அளவில் பிரபலமானது. அந்தப் பாடலின் இசைத்தட்டுகள் விற்பனையில் கிடைத்த தொகையை இவ்விரு இசைக்கலைஞர்களும் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்தனர்.

'இது கிறிஸ்மஸ் காலம் என்பது தெரியாமல்' வாழும் பலரது துயரங்களைத் துடைக்க நம்மை இறைவன் அழைக்கும் காலம், கிறிஸ்மஸ் காலம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.