சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

ஏழைகளுக்கு உதவுவதற்கு அருள்பணியாளர்கள் சமையல்

மும்பை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் சமையல் குழு - RV

26/12/2017 15:10

டிச.26,2017. ஏழைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டும் நோக்கத்தில், மும்பையில் அருள்பணியாளர்கள் குழு ஒன்று, தங்களின் பங்குத்தள மக்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஏழைகள் மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில், மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், தனது மும்பை உயர்மறைமாவட்டத்தில் ஏழைகளுக்கு உதவுவதற்குத் தூண்டி வருகிறார்.

ஆலயங்களில் காணிக்கை போடுகின்றவர்கள் குறைந்து வருவதை முன்னிட்டு, ஏழைகளுக்கு உதவுவதற்கு, புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துமாறு, தனது மும்பை உயர்மறைமாவட்டத்தின் ஒவ்வொரு பங்குத்தளத்தையும், கர்தினால் அவர்கள் கேட்டுக்கொண்டார்.  இதனால், மும்பையில் அருள்பணியாளர்கள் குழு ஒன்று, உணவு தயாரித்து வழங்கியுள்ளது.

மேலும், உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, இந்தக் கிறிஸ்மஸ் பெருவிழாவன்று, இத்தாலியில் அறுபதாயிரம் ஏழைகளுக்கும், உலகெங்கும் மேலும் இரண்டு இலட்சம் ஏழைகளுக்கும் மதிய உணவு வழங்கியுள்ளது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி

26/12/2017 15:10