சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

இறைவன் நம்மீது அன்புவயப்பட்டுள்ளார் - திருத்தந்தை டுவிட்டர்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் - AP

27/12/2017 14:47

டிச.27,2017. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, அன்பை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், @pontifex என்ற முகவரியில், ஒவ்வொருநாளும், ஒன்பது மொழிகளில், டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

"இறைவன் நம்மீது அன்புவயப்பட்டுள்ளார். நம்மைப்போல் ஒருவராக, வறுமையில், வலுவின்மையில் பிறந்து, நம்மை கனிவுடன் அவர் பக்கம் ஈர்க்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை அவர்கள், டிசம்பர் 27, இப்புதன் காலை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், கடந்த வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள "Mater Ecclesiae" துறவு மடத்தில் தங்கியிருக்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் காலத்தில் நடைபெற்றுவரும் இச்சந்திப்பு, இவ்வாண்டு 30 நிமிடங்கள் நீடித்ததென்று வத்திக்கான் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

27/12/2017 14:47