2017-12-27 16:02:00

2 இலட்சத்திற்கும் அதிகமான வறியோருக்கு கிறிஸ்மஸ் உணவு


டிச.27,2017. டிசம்பர் 25, இத்திங்களன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி, உரோம் நகரின் திரஸ்தவேரே பகுதியில் உள்ள புனித மரியா பசிலிக்கா வளாகத்தில், சான் எஜிதியோ எனப்படும் பிறரன்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆயிரக்கணக்கான வறியோருக்கு மதிய உணவு வழங்கினர்.

அதே நாளில், இத்தாலியின் பல்வேறு நகரங்களில் 60,000த்திற்கும் மேற்பட்ட வறியோருக்கு கிறிஸ்மஸ் விழாவன்று உணவு வழங்கப்பட்டதென்றும், அதேபோல், உலகின் 70 நாடுகளில் பணியாற்றும் சான் எஜிதியோ அமைப்பினர், 2 இலட்சத்திற்கும் அதிகமான வறியோருக்கு உணவு வழங்கினர் என்றும் இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, டிசம்பர் 26, இச்செவ்வாயன்று கொண்டாப்பட்ட புனித ஸ்தேவான் திருவிழாவன்று, சான் எஜிதியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள், இத்தாலியில் உள்ள 55 சிறைகளில், 5,500க்கும் அதிகமான கைதிகளுக்கு கிறிஸ்மஸ் உணவு வழங்கினர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.