சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

உர்துஜா, வின்தா புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் தேவை

உலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே - RV

28/12/2017 15:39

டிச.28,2017. பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள உர்துஜா (Urduja) மற்றும் வின்தா (Vinta) ஆகிய புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யும்படி, மணிலா பேராயரும், உலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

மராவி நகர் மோதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மிந்தனாவோ பகுதி மக்கள், தற்போது, வின்தா புயல் மற்றும் வெள்ளத்தால், மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில், 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், 176 பேர் காணவில்லை என்றும் ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

பிலிப்பின்ஸ் காரித்தாஸ் அமைப்பு, தேசிய சமுதாயப் பணிக்குழு, மற்றும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை அனைத்தும் இணைந்து, 97,000 யூரோ நிதியை திரட்டியுள்ளன என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

28/12/2017 15:39