2017-12-28 14:48:00

2017ம் ஆண்டு பற்றிய ஒரு கண்ணோட்டம்


டிச.28,2017. 2017ம் ஆங்கில ஆண்டு நிறைவுக்கு வரவிருக்கும் இந்நாள்களில், இந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கும் பலர், இந்த ஆண்டு பலனுள்ளதாக அமைவதற்கு உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி சொல்கின்றனர். தங்கள் மனதை வேதனைப்படுத்தியவர்களை மன்னிப்பதாகவும், தான் புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் எழுதுகின்றனர். தனிமனிதர் மட்டுமல்ல, சமூகங்கள், அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள் போன்ற எல்லா தரப்புகளுமே கடந்து சென்ற நாள்களை அலசுகின்றன. வத்திக்கான் வானொலியின் தமிழ்ப் பிரிவும், 2017ம் ஆண்டில் ஆதரவளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி சொல்கிறது. இந்த அன்பாதரவு தொடரும் என நம்புகின்றது. 2018ம் ஆண்டை நம்பிக்கையோடு வரவேற்க அழைக்கின்றது. இவ்வேளையில், 2017ம் ஆண்டைத் திரும்பிப் பார்த்து, 2018ம் ஆண்டை வரவேற்போம் என, வத்திக்கான் வானொலி அன்புள்ளங்களை அழைக்கிறார் கும்பகோணம் மறைமாவட்டம், அருள்பணி ஜூலியன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.