2017-12-30 15:26:00

மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட..


டிச.30,2017. மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று,, பெத்லகேம் இடையர்கள், தொடர்ந்து அழுகுரலை எழுப்பி வருகின்றனர் என்று, சிரிய கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் அந்தியோக்கிய முதுபெரும் தந்தை, இக்னேஷியுஸ் யூசெப் யூனன் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் இரவின் செய்தி, ஒவ்வோர் ஆண்டும் அமைதி, மகிழ்வு, ஒப்புரவு மற்றும் நம்பிக்கையை வழங்கினாலும், உலகில் மிகப் பழமையான திருஅவைகளில் ஒன்றான சிரியா மற்றும், ஈராக் தலத்திருஅவைகள், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளார், முதுபெரும் தந்தை யூனன்.

மத்தியக் கிழக்கில் எடுக்கப்பட்டுவரும் அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளும் எதிர்ப்பையே எதிர்கொண்டு வருகின்றன என்றும், அப்பகுதியின் முன்னேற்றம் உண்மையிலேயே சவால் நிறைந்தது என்றும், முதுபெரும் தந்தையின் செய்தி கூறுகின்றது.

முதுபெரும் தந்தை யூனன் அவர்கள், ஏறத்தாழ இரண்டு இலட்சம் சிரிய வழிபாட்டுமுறை கத்தோலிக்கரின் ஆன்மீகத் தலைவராவார்.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.