சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

டிசம்பர் 31, சனவரி 1 - திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

ஆண்டிறுதியில், தூய பேதுரு வளாகத்தில் - AP

01/01/2018 15:36

சன.01,2018. "அமைதியின் விதைகள் வளர்ந்துவரும் வேளையில், அவற்றைப் பேணிக்காத்து, நமது மாநகரங்களை, அமைதியை உருவாக்கும் தொழிற்கூடங்களாக உருமாற்றுவோம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1, புத்தாண்டு நாளன்று சிறப்பிக்கப்பட்ட உலக அமைதி நாளுக்கென வழங்கிய டுவிட்டர் செய்தியில் பதிவு செய்தார்.

மேலும், டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்குடும்பத் திருநாளன்று, "ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் நல்லிணக்க ஒருங்கிணைப்பே குடும்பம். அது, வாழ்வுக்கும், பிறருக்கும் திறந்த மனப்பான்மை கொண்டிருக்கும்போது, மேலும் உண்மையுள்ளதாக மாறுகிறது" என்ற கருத்தை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

01/01/2018 15:36