சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

திருத்தூதுப்பயணத் தயாரிப்புக்களில் ஈடுபடுவது சிறப்பு அனுபவம்

சிலே, பெரு நாடுகளுக்குரிய திருத்தூதுப்பயணத்தின் இலச்சனைகள் - RV

02/01/2018 15:09

சன.02,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதத்தில் சிலே நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணத் தயாரிப்புக்களில் 19 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

இத்தயாரிப்புப் பணிகளை ஆற்றிவரும் பிரான்சிஸ்கா ஹோசே மிரான்டா அவர்கள் கூறுகையில், இப்பணிகள் மறக்கமுடியாத அனுபவமாகத் தனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத் தயாரிப்புக்களில் தன்னார்வலராகப் பணியாற்றுவது, மேலும் அழகான திருஅவையையும், உலகையும் கட்டியெழுப்புபவர்களாக வாழ்வதற்குரிய அழைப்பாகும் என்றும் கூறினார், மிரான்டா.

கடந்த டிசம்பர் 27ம் தேதியன்று, திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத் தயாரிப்பின் தேசிய அவையினரைச் சந்தித்துப் பேசிய, சிலே அரசுத்தலைவர் Michelle Bachelet அவர்கள், திருத்தந்தையின் சிலே திருத்தூதுப்பயணம், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவைக்கும், சிலே நாடு முழுவதற்கும் சிந்திப்பதற்கு ஏற்ற காலமாக அமையும் என்று கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார், மிரான்டா.

2018ம் ஆண்டு சனவரி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சிலே நாட்டின் Santiago, Iquique, Temuco ஆகிய நகரங்களில், திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிகழ்த்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

02/01/2018 15:09