சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

ஆசியாவிலுள்ள சமயச் சிறுபான்மையினருக்காகச் செபிக்குமாறு..

மியான்மாரில் புத்தமதத் தலைவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - EPA

03/01/2018 15:51

சன.03,2018. ஆசியாவிலுள்ள சமயச் சிறுபான்மையினருக்காகச் செபிக்குமாறு நம் அனைவருக்கும் இம்மாதத்தில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆசியாவில் உள்ள கிறிஸ்தவர்களும், மற்ற சமயச் சிறுபான்மையினரும் தங்களது இறைநம்பிக்கையை முழுச் சுதந்திரத்துடன் கடைப்பிடிக்கும்படியாக.. என்பது, திருத்தந்தையின் சனவரி மாதச் செபக்கருத்தாக வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை, தன் உலகளாவிய செப அமைப்பின் வழியாக, மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் களையப்படவும், திருஅவையின் மறைப்பணிக்கு உதவவும் செயல்பட்டு வருகிறார்.

திருத்தந்தையின் ஒவ்வொரு மாதச் செபக்கருத்துக்காக நாம் செபிக்கும்போது, திருத்தந்தையின் உலகளாவியப் பணிகளுக்கு நாம் ஆன்மீக வழியில் உதவுகின்றோம் என்று, இயேசு சபை அருள்பணியாளர் William Blazek அவர்கள் கூறினார்.

ஆசியாவில் சமயச் சிறுபான்மை மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிவரும் இக்காலத்தில், அம்மக்களுக்காகச் செபித்து, அவர்களுடன் நம் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்கு, இந்த சனவரியில் சிறப்பாக நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அருள்பணி Blazek அவர்கள் கூறினார்.  இவர், திருத்தந்தையின் உலகளாவிய செப அமைப்பின், கானடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பகுதியின் இயக்குனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

03/01/2018 15:51