சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

இறைவன் நம் வாழ்வின் அழுக்கடைந்த பாதைகள் வழியாக நடக்கிறார்

புதன் பொது மறைபோதகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AP

05/01/2018 15:38

சன.05,2018. “இறைவன் நம் வாழ்வின் அழுக்கடைந்த பாதைகள் வழியாக நடந்து, நம்மை மகிழ்வுக்கு அழைப்பதன் வழியாக, அன்பு மற்றும் மகிழ்ச்சிக்கான நம் ஏக்கத்திற்குப் பதிலளிக்கின்றார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், திருப்பீடத்திற்கான லெபனான் நாட்டு புதிய தூதுவர் Antonio Raymond Andary அவர்களை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து, அவரிடமிருந்து பணிநியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்திய திருப்பீடத்தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்களையும், இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இவ்வெள்ளி மாலை மூன்று மணிக்கு, உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஏறத்தாழ 120 சிறாரையும், அவர்களின் பெற்றோரையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 06, இச்சனிக்கிழமை வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் ஆண்டவருடைய திருகாட்சி பெருவிழாவன்று, காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

05/01/2018 15:38