2018-01-06 16:08:00

புலம்பெயர்ந்த ஈராக் கிறிஸ்தவர்கள் சொந்த இடங்களுக்கு...


சன.06,2018. ஈராக்கில் சண்டை மற்றும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசு அமைப்பில் செயல்பட்ட ஜிகாதிகளுக்கு அஞ்சி, நாட்டைவிட்டு வெளியேறிய கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 33 விழுக்காட்டினர், அண்மை மாதங்களில் தங்களின் இல்லங்களுக்குத் திரும்பியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஈராக்கியர்கள், 2014ம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக தங்களின் சொந்த வீடுகளில் குடியேறத் தொடங்கியுள்ளனர் என்றும்,  ஏறத்தாழ முப்பதாயிரம் கிறிஸ்தவர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.  

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நினிவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விடத்திற்குக் கிறிஸ்தவர்கள் திரும்புவதை இன்னும் நினைத்துப் பார்க்க இயலவில்லை எனினும், மொசூல் நகருக்குக் கிறிஸ்தவர்கள் திரும்பியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, Aid to the Suffering Church (ACS) என்ற அமைப்பு, பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் மறுவாழ்வுப் பணிக்கு நிதி திரட்டி வருகின்றது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.