சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

உண்மை வாழ்வுக்கு உதவும் மூன்று வழிகள்

திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

09/01/2018 12:39

சன.08,2018. உண்மையான ஒரு வாழ்வை மேற்கொள்வதற்கு உதவும் மூன்று வழிகளை இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'மகிழ்வு, செபம், நன்றியுணர்வு ஆகிய மூன்று வழிகளும், நாம் நம் வாழ்வை உண்மை உள்ளதாக வாழ்வதற்கு உதவுபவை' என திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'திருமுழுக்கு என்றால் ஒளியூட்டுதல் என பொருள்படும், ஏனெனில், நம் இதயத்தை ஒளியூட்டும் விசுவாசம், அனைத்தையும் வேறுபட்ட ஒளியில் காண நமக்கு உதவுகிறது'  என எழுதியுள்ளார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

09/01/2018 12:39