சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

மகிழ்வான ஆன்மா, ஆரோக்யமான நிலம் போன்றது

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS

10/01/2018 13:17

சன.09,2018. “மகிழ்வான ஆன்மா, நலமான நிலம் போன்றது, இந்நிலத்தில் வாழ்வு மலர்ந்து, நல்ல கனிகளை உற்பத்தி செய்ய முடியும்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வு நலமாக அமைவதற்குரிய வழிகளை, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் வத்திக்கான் செய்திகளை வாசிப்பவர்கள் மற்றும் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை, நாற்பது இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று, வத்திக்கான் சமூகத்தொடர்புச் செயலகம் அறிவித்துள்ளது.

வத்திக்கான் செய்திகள், பதிய இலச்சினையுடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், முகநூல், டுவிட்டர், யு டியுப், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை, நாற்பது இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று, அறிவித்துள்ளது, வத்திக்கான் சமூகத்தொடர்புச் செயலகம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/01/2018 13:17