2018-01-12 14:53:00

இமயமாகும் இளமை …............: உதவிடவே பிறந்தவர்கள் இவர்கள்


சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த சொல்லித் தருகின்றனர், தாம்பரத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள். மருத்துவ உதவி, அப்பா இல்லாத குழந்தைகளின் கல்விக் கட்டண உதவி, தன்னார்வ அமைப்புகளுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருட்களை வாங்கித் தருவது, பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அளிக்க முயல்வது ஆகியவற்றுக்கு வாட்ஸ் அப், முகநூல் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் இம்மாணவர்கள். இருபது முதல் முப்பது மாணவர்கள் இணைந்து தொடங்கிய ‘உதவிடத்தான் பிறந்தோம்’ என்னும் வாட்ஸ்அப் குழுவில், தற்போது 300க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளார்கள். சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்திவரும் இக்குழுவினர், தாம்பரம், தியாகராய நகர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் சுவர்களுக்கும் வெள்ளையடிக்கிறார்கள். தொடக்கப் பள்ளிகளுக்கு ஆத்திசூடி எழுதுவது, நடுநிலைப் பள்ளிகளுக்குக் கல்வி தொடர்பான ஓவியங்களைத் தீட்டுவது போன்றவை, இவர்கள் வார இறுதியில் ஆற்றும் பணிகள். விளிம்புநிலை மக்களுக்காக மருத்துவ முகாம்களை ஒருங்கிணைப்பது, கொடையாளர்களிடமிருந்து இரத்தம் பெற்றுத்தருவது போன்ற பணிகளையும் செய்துவருகின்றனர்.

இளையோரின் சக்தியும், ஆர்வமும், சமுதாய முன்னேற்றத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதற்கு, இது நல்லதோர் எடுத்துக்காட்டு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.