2018-01-13 15:46:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய புதிய நூல்


சன.13,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றி இதுவரை சொல்லப்படாத பல தகவல்கள் கொண்ட, ‘L’Altro Francesco’ (The Other Francis) என்ற தலைப்பிலான புதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

Deborah Castellano Lubov அவர்கள் எழுதியுள்ள, 200 பக்கங்கள் கொண்ட இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றி, திருப்பீடத் தலைமையகத்திலுள்ள 14 முக்கிய தலைவர்கள், திருத்தந்தையின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த, ஹோர்கே மாரியோ பெர்கோலியோ எனப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையானவர், நட்புடன் பழகக்கூடியவர், நிறைய நகைச்சுவை செய்திகள் பேச விரும்புவர், அதேநேரம், தனக்கு மிகவும் பிடித்த மனிதாபிமானம் பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தக்கூடியவர் என்று, அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

மனித மாண்பு, கட்டுக்கடங்காத தாராளமயமாக்கல், செல்வம் பகிர்ந்தளிக்கப்படல், படைப்பைப் பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் திருத்தந்தை கவனம் செலுத்துபவர் எனவும், இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

‘L’Altro Francesco’ என்ற நூல், விரைவில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.