2018-01-15 15:28:00

ஆப்ரிக்காவுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் நிதி


சன.15,2018. ஆப்பிரிக்க கண்டத்துடன் ஒருமைப்பாட்டை அறிவிப்போம் என்ற அழைப்புடன், ஆப்பிரிக்க நாடுகளுடன் தங்கள் ஒருமைப்பாட்டினை அறிவித்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

எண்ணற்ற கடன், தொற்று நோய்கள், மிக ஏழ்மை நிலைகள், அரசியல் பதட்ட நிலைகள் போன்றவற்றால் பல்வேறு சமூக மற்றும் பொருளாதர துன்ப நிலைகளைச் சந்தித்துவரும் ஆப்ரிக்கக் கண்டத்தில், கடந்த முப்பது ஆண்டுகளில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, மும்மடங்கு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், மேய்ப்புப் பணித்திட்டங்களுக்கு ஆப்ரிக்க திருஅவையிடம் போதிய பொருளாதார வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

நற்செய்தியை எடுத்துரைப்பது, பள்ளிகள் நடத்துவது, அருள்பணியாளர் பயிற்சி, பொதுநிலை கத்தோலிக்க ஆன்மீக வழிகாட்டிகளுக்கு பயிற்சி போன்றவற்றிற்கு இந்த பணம் செலவிடப்படும் என தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

குடிபெயரும் மக்களுக்கு உதவி, ஏழை நாடுகளில் குடிநீர் வசதி, நல வாழ்வுத் திட்டங்கள், ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கவும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ஒருமைப்பாட்டு நிதி உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், ஆப்ரிக்காவின் மேய்ப்புப்பணித் திட்டங்களுக்கென, 10 இலட்சம் டாலர்களுக்கு மேல் வழங்கியுள்ளனது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.