2018-01-15 12:28:00

குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் 104வது உலக நாள் திருப்பலி


சன.15,2018. சனவரி 14, இஞ்ஞாயிறன்று, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் 104வது உலக நாளை, கத்தோலிக்கத் திருஅவை சிறப்பித்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், காலை 10 மணிக்கு திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.

இந்தியா, இலங்கை, அரேபிய நாடுகள், உரோமேனியா, பிலிப்பின்ஸ், ஆப்ரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட, 9,000த்திற்கும் அதிகமானோர் இத்திருப்பலியில் பங்கேற்றனர்.

பல்வேறு மொழிகளில் செபங்களும், பாடல்களும் இடம்பெற்ற இத்திருப்பலியில், பசிலிக்காவின் ஒரு பகுதியில், 49 நாடுகளைச் சேர்ந்த கொடிகளை ஏந்தியபடி, அந்தந்த நாடுகளின் பாரம்பரிய உடைகளில் விசுவாசிகள் பங்கேற்றனர்.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான 1914ம் ஆண்டு, அப்போது திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை, புனித 10ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள், இவ்வாண்டு 104வது முறையாக திருஅவையால் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.