2018-01-24 14:49:00

இமயமாகும் இளமை.... வலைத்தளங்கள் வழியே நாட்டு மாடுகள் மீட்பு


வறட்சி, குடிநீர், தீவனம் தட்டுப்பாடு, நவீன வாகனங்களின் வருகை ஆகியவற்றால் மாடுகளின் தேவை குறைந்துவிட்டது எனக்கூறி, நாட்டு மாடுகளை அடிமாட்டுக்கு விற்பது அதிகரித்துள்ளது. இதனால் நாட்டு மாடுகளின் பாரம்பரிய வகைகளாகக் கூறப்படும், காங்கேயம், உம்பளச்சேரி, மணப்பாறை, குங்கனூர், பர்கூர், ஆலம்பாடி போன்ற இரகங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காங்கேயம் மாடுகள் இனத்தைக் காக்கும் நோக்கில், பழையகோட்டை மாட்டுத்தாவணி சந்தை மற்றும், காங்கேயம் மாடு வளர்ப்பு கோசாலைகளை நடத்தி வருகிறார் சிவகுமார். இவர், அமெரிக்காவில், கணினி துறையில் பணி செய்துவிட்டு, தற்போது, நாட்டு மாடுகள் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். நாட்டு மாடுகள் அழிவதையும், அவை, அடிமாடாக விற்கப்பதையும் தடுக்க, ‘பழையகோட்டை மாட்டுத்தாவணி’என்ற மாட்டு சந்தையையும், காடையூரில், ‘கொங்க கோசாலை’என்ற காங்கேயம் இன மாடுகளை வளர்க்கும் கோசாலையையும் நடத்தி வருகிறார் சிவகுமார்.

மேலும், வாட்ஸ்ஆப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக, காங்கேயம் மாடுகளை அடிமாட்டுக்கு விற்காமல் தடுப்பதுடன், அவைகளை வளர்க்க விரும்புபவர்களிடம் விற்கவும் ஏற்பாடு செய்து உதவி வருகிறார், சமூக ஆர்வமுடைய இந்த இளைஞர். நான்காண்டுகளில், 1,500 மாடுகளுக்குமேல் விற்பனை செய்துள்ளோம் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

நமக்கேயுரிய பாரம்பரிய சொத்துக்களைக் காப்பதிலாவது அக்கறை காட்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.