2018-01-26 15:18:00

மத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை


சன.26,2018. மத்திய கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு துன்புறும்வேளை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையே, அமைதிக்கான கலந்துரையாடல் மீண்டும் துவங்கப்பட வேண்டுமென, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கின் நிலைமை குறித்து, ஐ.நா.பாதுகாப்பு அவையில், இவ்வியாழனன்று இடம்பெற்ற விவாத மேடையில், திருப்பீடத்தின் சார்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

இஸ்ரேலும், பாலஸ்தீனாவும் இரு நாடுகள் குறித்த தீர்வைக் கொணரும் கலந்துரையாடலை மீண்டும் துவங்குமாறும், எருசலேம் நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை எல்லா நாடுகளும் மதிக்குமாறும், பேராயர், அவுசா அவர்கள், ஐ.நா.வில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.