சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

செபங்கள் வழியாக உண்மையான மகிழ்வில் நுழைய....

இரஷ்ய ஆயர்களுடன் திருத்தந்தை

29/01/2018 17:26

சன.29,2018. 'உண்மையான மகிழ்வின் ஆதரமாக இருக்கும் இறைவனுடன் கொள்ளும் நிலையான உறவில், நம் செபங்கள் வழியாக நுழையமுடியும்' என, தன் திங்கள் தின டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஹான்சன் எனும் தொழு நோயால் துன்புறும் மக்களுக்காக செபிப்பதாகவும், இவர்கள் மீது அக்கறைகொண்டு, இவர்களையும் சமூகத்தின் அங்கமாக மாற்ற உழைத்துவரும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் எழுதியுள்ளார்.

இஞ்ஞாயிறு, அதாவது, சனவரி மாதத்தின் கடைசி ஞாயிறு, உலக தொழுநோய் விழிப்புணர்வு தினம் சிறப்பிக்கப்பட்டது.

மேலும், இத்திங்களன்று, ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிகழும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த, இரஷ்ய கூட்டமைப்பின் நான்கு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

29/01/2018 17:26