2018-01-29 17:08:00

பொறுப்புணர்வும், நினைவுமே, பாராமுக நோய்க்கு தடுப்பு மருந்து


சன.29,2018. யூதர்களுக்கு எதிரான போக்குகளை வன்மையாகக் கண்டிக்கும் நாடுகளின், நிறுவனங்களின், தனியார் அமைப்புகளின் தலைவர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்முடைய பொறுப்புகளும், கடந்த கால நினைவுகளும், பாராமுகம் எனும் நோய்க்கு தடுப்பு மருந்தாக செயல்பட வேண்டும் என, இக்கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொறுப்புள்ளவர்களாக செயல்படுவது என்பது, பொறுப்புடன் பதிலுரைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிடுகின்றது என்றார்.

நம்முடைய அமைதி என்பது, கடந்த கால துயரங்களுக்கான கண்ணீரையும், செபத்தையும், பாவமன்னிப்பையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, கடந்த கால நினைவுகள், வருங்காலத்திற்கான திறவுகோலாக செயல்படுகின்றன என்றார்.

வெறுத்து ஒதுக்குதல் இன்றியும், பாகுபாட்டுடன் நடத்தல் இன்றியும், வருங்காலத்தை அமைக்க வேண்டிய பொறுப்பு இளையோருக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.