சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தையின் டுவிட்டர்: "இயேசுவே நம் இணைப்பாளர்"

புதன் மறைக்கல்வியுரைக்கு முன் மக்கள் மத்தியில் செல்வதற்காக திறந்த வாகனத்தில் ஏறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

31/01/2018 14:52

சன.31,2018. "இயேசுவே நம் இணைப்பாளர், அவரே, நம்மை தந்தையோடும், ஒருவர் ஒருவரோடும், ஒப்புரவாக்குகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற முகவரியுடன் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

சனவரி 31, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1449 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற instagram முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 510 என்பதும், அவற்றை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 52 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

31/01/2018 14:52