சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ பிறரன்புப் பணி

வறுமை ஒழிப்பு போராட்டத்தில் கத்தோலிக்கர்களை இணைக்க...

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை உறுப்பினர்களில் சிலர் - AP

01/02/2018 14:23

பிப்.01,2018. வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் அனைத்து கத்தோலிக்கர்களையும் இணைக்கும் ஒரு முயற்சியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, சனவரி 31, இப்புதனன்று, ஆங்கிலம், இஸ்பானியம் ஆகிய இரு மொழிகளில் இரு இணையத்தளங்களை உருவாக்கியுள்ளனர்.

வறுமை விழிப்புணர்வு மாதம் என்றழைக்கப்படும் சனவரியின் இறுதியில், www.PovertyUSA.org என்ற இணையத்தளத்தை ஆங்கிலத்திலும், www.PobrezaUSA.org என்ற இணையத்தளத்தை இஸ்பானிய மொழியிலும் துவங்கியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வறுமை என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை என்றும், கிறிஸ்துவின் சீடர்களாக இந்த உண்மையை எதிர்கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அமெரிக்க ஆயர் பேரவையின், நீதி, மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் டேவிட் டேலி (David Talley) அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், 1 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் உட்பட, 4 கோடியே 10 இலட்சம் பேர் வறுமையில் உள்ளனர் என்று கூறும் இந்த இணையத்தளம், வறியோருக்கு உதவும் பல செயல்திட்டங்களையும் வெளியிட்டுள்ளது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

01/02/2018 14:23