சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் : ஊழலுக்கு மறுப்பு தெரிவிப்போம்

பெரிய வெள்ளி திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

02/02/2018 15:23

பிப்.02,2018. உடைமைகள், அரசியல், ஆன்மீகம் ஆகியவற்றின் மீது அதிகாரம் கொண்ட எல்லாரும், ஊழலுக்கான எந்தத் தூண்டுதலையும் எதிர்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிப்ரவரி மாத செபக் கருத்து பற்றி, காணொளிச் செய்தியில் இவ்வாறு பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிமைமுறை, வேலைவாய்ப்பின்மை, இயற்கையைப் புறக்கணித்தல் போன்றவற்றுக்கு அடிப்படை காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஊழல், மரணக் கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்லும், ஒரு மரண நடவடிக்கை என்றும், ஏனெனில், அதிகாரம் மற்றும் உடைமைகளைக் கொண்டிருப்பதற்குரிய தாகத்திற்கு,  எல்லையில்லை என்பதை இது அறிந்திருக்கின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, ஊழல் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, உடைமைகள், அரசியல், ஆன்மீகம் ஆகியவற்றின் மீது அதிகாரம் கொண்ட எல்லாரும், ஊழலுக்கான எந்தத் தூண்டுதலையும் எதிர்க்குமாறு, பிப்ரவரி மாதத்தில் நாம் எல்லாரும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/02/2018 15:23