சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ குடும்பம்

மத்தியக் கிழக்கு மோதல்களால் குழந்தை உயிரிழப்புகள் அதிகரிப்பு

சிரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - AP

05/02/2018 15:47

பிப்.05,2018. மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவில் இடம்பெறும் மோதல்களால், சனவரி மாதத்தில் மட்டும், குறைந்தது, 83 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சிரியாவில் 59 குழந்தைகள், ஏமனில் 16, லிபியாவில் 6, ஈராக் மற்றும் பாலஸ்தீனத்தில் ஒன்று வீதம், 83 குந்தைகள் ஜனவரி மாதத்தில் மோதல்களுக்கு பலியாகியுள்ளதாகக் கூறும், ஐ நாவின் குழந்தைக்கான அவசரகால நிதி அமைப்பு, இது தவிர, லெபனானில் அடைக்கலம் தேடியுள்ள குழந்தைகளுள் நான்குபேர் உயிரிழந்துள்ளதையும் குறிப்பிடுகின்றது.

மத்தியக் கிழக்கு நாடுகளிலும், வட ஆப்ரிக்காவிலும் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை இழந்துள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிடும் யுனிசெஃப் அமைப்பு, பள்ளிக்குச் செல்ல முடியா நிலையுயிலும், விளையாடக் கூட உரிமையற்றும் வாழும் நிலை குழந்தைகளுக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

05/02/2018 15:47