2018-02-06 16:33:00

ஐரோப்பாவில் கலப்பு மத திருமணங்கள் எழுப்பும் சவால்கள்


பிப்.06,2018. 'கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே நிலவும் உறவுகளில் விசுவாசமும் ஆன்மீகமும்' என்ற தலைப்பில், இப்புதன் முதல் வெள்ளிவரை ஐரோப்பிய ஆயர்கள் பேரவைப் பிரதிநிதிகளுக்கும், முஸ்லீம் பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடல் அல்பேனியாவில் இடம்பெறுகிறது.

அல்பேனிய பேராயர் ஆஞ்சலோ மஸ்ஸாஃப்ராவின் அழைப்பின்பேரில் Scutari நகரில் இடம்பெறும் இக்கருத்தரங்கு, கத்தோலிக்க மதத்தலைவர்கள், பிறமதத்தவருடன் உரையாடலை மேற்கொள்வதற்குக் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதங்களிடையே நிலவும் உறவுகளில், பிறரின் நல்ல நடைமுறைகளையும், முயற்சிகளையும் எவ்விதம் ஏற்றுக் கொள்வது என்பது குறித்த விவாதங்கள் இடம்பெற உள்ள இக்கருத்தரங்கில், அல்பேனியாவின் இஸ்லாமிய குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர்.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அல்பேனிய நாட்டில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களில் எழும் மேய்ப்புப்பணி சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.