2018-02-06 16:22:00

கணனி உலகில் சிறார் பாதுகாப்பிற்கு அர்ப்பணம்


பிப்.06,2018. 'இன்றைய கணனி உலகில், சிறாரை பாதுகாப்பதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற அழைப்பை அனைவரும் பெற்றுள்ளோம்' என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கணனி உலகின் இணையப் பக்கங்களை பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறார் என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கும் வேளையில், இச்சிறார் தவறான பாதையில் வழிநடத்தப்படக்கூடாது என்பதை மனதில்கொண்டு, இவர்களின் பாதுகாப்பிற்கு நாம் உறுதி வழங்க வேண்டும் என பல வேளைகளில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் டுவிட்டர் பக்கத்திலும் அதனை முன்வைத்துள்ளார்.

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF விடுத்துள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் சிறார், புதிதாக இணையத்தைத் திறந்து, அதைப் பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்கின்றனர் என்று தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.