2018-02-06 16:28:00

புனித பூமி திருப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு


பிப்.06,2018. எருசலேமுக்கும், புனித பூமியின் ஏனைய புனித தலங்களுக்கும் வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருவதாக, புனித பூமி கிறிஸ்தவ தகவல் மையம் தெரிவிக்கிறது.

2016ம் ஆண்டிலிருந்து திருப்பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருவதாகக் கூறும் இம்மையம், இந்த ஆண்டு சனவரி மாதத்தில் 770 குழுக்கள் வழியாக 26,000 திருப்பயணிகள் புனித பூமிக்கு வந்துள்ளதாகக் கூறுகிறது.

2016ம் ஆண்டு சனவரி மாதம் 11,000 பேராக இருந்த திருப்பயணிகளின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டில் 16,000 ஆகவும், இவ்வாண்டு சனவரியில் 26,000 ஆகவும் உயர்ந்துள்ளது.

2017ம் ஆண்டில் 36 இலட்சம் திருப்பயணிகள் வந்துள்ளது, அதற்கு முந்தைய ஆண்டை விட 23 விழுக்காடும், 2015ம் ஆண்டை விட 29 விழுக்காடும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு எருசலேம், மற்றும், புனித பூமியின் ஏனைய திருத்தலங்களுக்கும் வந்த திருப்பயணிகளின் எண்ணிக்கையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பயணிகள் முதலிடத்திலும், இரஷ்யர்கள் இரண்டாம் இடத்திலும், பிரெஞ்ச் நாட்டவர், ஜெர்மானியர், பிரிட்டானியர், இத்தாலியர் என அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.