2018-02-07 15:46:00

இமயமாகும் இளமை..: இயற்கை வளத்தைப் பாதுகாக்க இரவு நேரக் காவல்


பொதுவாக மக்கள் அதிகமுள்ள இடங்களில் இரவுக் காவலர்கள் இருப்பார்கள். ஆனால் கோவையில் மலையடிவார கிராமம் ஒன்றில் ஆற்றைக் காக்க இளைஞர்கள் காவல் இருக்கிறார்கள். ஆம், கோவையின் உயிர்நாடியான நொய்யல் ஆற்றில் மணல் திருடப்படுவதைத் தடுக்க, ஒன்றல்ல, இரண்டல்ல, 40 இளைஞர்கள் இரவு நேரக் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் கிளைநதிகள் இணைந்து கோவையின் மேற்குப் பகுதியில் நொய்யல் ஆறு உருவாகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை வளம் கொழிக்க வைத்த இந்த ஆறு, தற்போது உருத் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது. பாயும் இடங்களில் எல்லாம் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் இந்த ஆறு, தொடங்கும் இடமான கோவையில் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொறுமையிழந்த கிராம இளைஞர்கள், தற்போது அந்த பொறுப்பைக் கையில் எடுத்துள்ளனர்.

தற்போது ‘நொய்யல் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் நதியைக் காக்க இரவு, பகல் பாராது போராடி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.