சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை : வெளிநாட்டவரை வியக்கவைத்த இந்திய இளைஞர்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் விற்பனைக் கூடம் ஒன்று - AP

08/02/2018 11:05

ஒரு சமயம், இந்திய இளைஞர் ஒருவர், கானடா நாட்டின் Vancouver நகரத்திலுள்ள மிகப்பெரிய பல்பெருள் அங்காடி ஒன்றின் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டார். இளைஞரது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளியும் அவரை வேலையில் சேர்த்துக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை விற்கப்படும் அங்காடி அது. முதல் நாளன்று இளைஞருக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும், இளைஞரை வரவழைத்த முதலாளி, "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது" என்று கேட்டார். ஒருவருக்கு என்றார் இளைஞர். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய்?" என்று முதலாளி கேட்க, "93,3005 பவுண்டுகள்" என்றார் இளைஞர். அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" என்று கேட்க, வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்" என்றார் இளைஞர். ஆனால்  அவற்றின் விலை இவ்வளவு இல்லையே? என முதலாளி மீண்டும் கேட்டார். அதற்கு அந்த இளைஞர். "உண்மைதான். இவற்றை அவர் வாங்கியபின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய வாகனம் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4x4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் வாகனத்தையும் விற்றேன்.  நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்" என்றார் இளைஞர். சரி, அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார்? என முதலாளி கேட்க, "இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன் என்றார் இளைஞர். "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலைசெய்தேன் என்று சொன்னாய்?" எனக் கேட்டார் முதலாளி. "தனியார் மருத்துவமனை ஒன்றில், முக்கிய பிரிவு ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றினேன்" என்று இளைஞர் சொல்ல, "இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த அங்காடியைக் கவனித்துக்கொள், நான் சிறிது நாள்கள் அங்குச் சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்" என்றார் முதலாளி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

08/02/2018 11:05