சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்காக ‘சாதாரண நாயகர்கள்’

பேராயர் Giovanni Angelo Becciu அவர்களுடன் அருள்பணி Dario Edoardo Viganò - ANSA

08/02/2018 15:42

பிப்.08,2018. பிரம்மாண்டமான, திட்டமிடப்பட்ட செயல்களால் இவ்வுலகை மாற்றுவதை விட, மிகச் சாதாரண செயல்கள் வழியே இவ்வுலகை மாற்றிவிட முடியும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

‘சாதாரண நாயகர்கள்’ என்று பொருள்படும் ‘#OrdinaryHeroes’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு முயற்சியைக் குறித்து, இவ்வியாழன் காலை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய, திருப்பீடச் செயலர் அலுவகத்தின் உயர் அதிகாரி, பேராயர் Giovanni Angelo Becciu அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள Peter's Pence என்ற அமைப்பிற்கு உதவும் வகையில், திருத்தந்தையின் உருவம் பதித்த பனியன்கள், விளையாட்டுத் துறை, கலைத் துறை ஆகியவற்றில் புகழ்பெற்றவர்களின் கையொப்பங்களுடன் ஏலத்தில் விடப்பட்டு, அந்தத் தொகை, தர்மச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பேராயர் Becciu அவர்கள், விளக்கிக் கூறினார்.

வத்திக்கான் தொடர்புத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், இத்தொடர்புத் துறையின் தலைவர், அருள்பணி Dario Edoardo Viganò அவர்களும், புகழ்பெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர், Francesco Totti அவர்களும் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

08/02/2018 15:42