சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை ...: நேர்முகத் தேர்வு இன்றி வேலை பெற்ற இளைஞர்

இளைஞர் ஒருவரின் நேர்முகம் - AP

09/02/2018 14:39

அட்டகாசமான, படைப்பாற்றல் மிக்க, சுயவிவரப்பட்டியல் வழியாக, நேர்முகத்தேர்வு இல்லாமல், இலண்டனில் வேலை பெற்றுள்ளார், பெங்களூருவைச் சேர்ந்த சுமுக் மேத்தா என்ற 21 வயது இளைஞர்.

மேலாண்மை பட்டதாரியான சுமுக் மேத்தா, ‘ஜி.கியு.’ இதழின் இலண்டன் அலுவலகத்தில் பணிபுரிய ஆசைப்பட்டுள்ளார். ‘ஜி.கியு.’ இதழ், ஆண்களின் நடை உடை பாவனைகள் குறித்தும், மாறி வரும் உடை நாகரீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவை குறித்தும், செய்திகளை  வழங்கிவரும் இதழ். இவ்விதழில் வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதால், தன்னைப் பற்றிய விவரங்களை,  வித்தியாசமான, படைப்பாற்றல் மிக்க முறையில், ஜி.கியு. இதழ் போன்றே 20 பக்க அளவில் தயார் செய்ய முடிவு செய்தார் சுமுக் மேத்தா. இதற்கென, சிறப்பு புகைப்படங்கள், வடிவமைப்புகள், என நிறைய பணம் செலவழித்து, 3 வாரம் கடினமாக உழைத்துள்ளார். தனது படிப்பு, அனுபவம், இதுவரை சாதித்தவை, பொழுதுபோக்கு போன்றவற்றை ‘ஜி.கியு.’ இதழ். போலவே வடிவமைத்துள்ளார். சாதாரணமாக பார்க்கும்போது, அது அவரைப்பற்றிய விவரம் என்று தோன்றாது, மாறாக ஒரு ‘ஜி.கியு.’ இதழ் என்றே நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு அதை சிறப்பாக உருவாக்கியுள்ளார். சுமுக் மேத்தாவின் இந்த உழைப்பு வீண் போகவில்லை. இலண்டனில் இருக்கும் ‘ஜி.கியு.’ இதழ் ஆசிரியர், மேத்தாவின் இந்த உழைப்பைப் பார்த்து அசந்துவிட்டார். இதனால் மேத்தாவிடம் நேர்முகத் தேர்வு கூட நடத்தாமல், நேரடியாக, அவரை வேலைக்கு எடுத்துக்கொண்டார், அதுவும் இலண்டன் அலுவலகத்திற்கு.

தீமை தராத புதுமைகளைத் தேடும் இளையோர், வெற்றி பெறுவது நிச்சயம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

09/02/2018 14:39