சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

அறிவியல் ஆய்வில் பெண்கள், சிறுமிகளுக்கு ஆதரவளிக்க...

அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றும் பெண் ஆய்வாளர் - REUTERS

10/02/2018 15:35

பிப்.10,2018. அறிவியல் ஆராய்ச்சியில் பணியாற்ற விரும்பும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது என்று, ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உலக நாள், பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரெஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

பள்ளியிலும், பணியிலும், அறிவியல் மற்றும், கணித்தில், சிறுமிகளும், சிறுவர்களும் தங்களின் இலக்குகளை நிறைவேற்றுவதற்குத் திறமையானவர்களாக இருந்தாலும், உலக அளவில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளில், பெண்கள் முப்பது விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர் என்றும், கூட்டேரெஸ் அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் முக்கியமான பங்கை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஐ.நா.பொது அவை, 2015ம் ஆண்டு டிசம்பரில், அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உலக நாளை உருவாக்கியது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

10/02/2018 15:35