2018-02-10 15:48:00

26வது உலக நோயுற்றோர் நாளுக்கு கமிலியன் சபை செய்தி


பிப்.10,2018. மருத்துவ உலகில், நோயாளர் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும், சிகிச்சை அளிப்பவருக்கும், அதைப் பெறுபவருக்கும் இடையேயுள்ள தொடர்பு உணரப்பட வேண்டும் என்றும், கமிலியன் நிறுவனத் தலைவர் Palma Sgreccia அவர்கள் கூறியுள்ளார்.

பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று, 26வது உலக நோயுற்றோர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள Sgreccia அவர்கள், மனிதம் நிறைந்த கலாச்சாரமும், அறிவியல் கலாச்சாரமும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நோயாளரின் சுயவரலாறு, சிகிச்சைக்கு உதவும் சரியான கருவி என்றும், மருத்துவத்தில் மனிதாபிமானப் பண்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அச்செய்தி கூறுகிறது.

நோயுற்றோருக்குப் பணியாற்றுவோர் எனப்படும் துறவு சபை, புனித கமிலஸ் தெ லெல்லிஸ் என்பவரால், 1582ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கமிலியன்கள் எனப்படும் இச்சபையினர், கறுப்புநிற அங்கியில் சிவப்பு நிறச் சிலுவை அணிந்துள்ளனர். இந்த சிவப்புச் சிலுவை, பிற்காலத்தில், மருத்துவப் பணியின் உலகளாவிய அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.