சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

TV2000 தொலைக்காட்சிக்கு திருத்தந்தை வாழ்த்து

ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

10/02/2018 15:34

பிப்.10,2018. “கடவுள் நம் வாழ்வில் பிரசன்னமாய் இருந்து, தமது அன்பு அனைத்தையும் வெளிப்படுத்துகின்றார் மற்றும் மனத்தாராளத்துடன் பதிலளிக்க நம்மை ஊக்கப்படுத்துகிறார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், TV2000 எனப்படும் இத்தாலிய தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டையொட்டி, இவ்வெள்ளியன்று, அதன் இயக்குனருக்கு, தொலைபேசி வழியாக வாழ்த்துச் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 09, இவ்வெள்ளியன்று, எதிர்பாராத நேரத்தில் திருத்தந்தையின் தொலைபேசி அழைப்பைக் கேட்ட, அந்தத் தொலைக்காட்சி இயக்குனர், திருத்தந்தையின் அழைப்புக்கு நன்றி சொல்லியபோது, உங்களின் பணிக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய ஆயர் பேரவையால் நடத்தப்படும் TV2000 எனப்படும் தொலைக்காட்சி அலைவரிசை, 1998ம் ஆண்டில் Sat 2000 என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பின் 2009ம் ஆண்டில் TV2000 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/02/2018 15:34