2018-02-12 16:15:00

மதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பங்களாதேஷிற்கு பாராட்டு


பிப்.12,2018. பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் Sheikh Hasina அவர்கள், இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பிற்குப்பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்து உரையாடினார் பிரதமர்.

பங்களாதேஷிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், திருத்தந்தையின் அண்மை பங்களாதேஷ் திருப்பயணத்தின்போது வழங்கப்பட்ட சிறப்பு வரவேற்பு குறித்தும், திருத்தந்தையின் நிகழ்வுகளில், கிறிஸ்தவரல்லாதவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

பங்களாதேஷ் நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்து, குறிப்பாக, கல்வித்துறையில் ஆற்றிவரும் பணிகள் குறித்தும், மதங்களிடையே நல்லுறவை வளர்க்கவும், சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு பங்களாதேஷ் நாடு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும், பங்களாதேஷ் பிரதமருக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளில் விவாதிக்கப்பட்டன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.