2018-02-17 14:55:00

பிப்ரவரி 18-23 அரிச்சாவில் திருத்தந்தை ஆண்டுத் தியானம்


பிப்.17,2018. “தங்களின் தவறுகளை ஏற்று, மன்னிப்பு கேட்பவர்கள், ஏனையோரிடமிருந்து மன்னிப்பையும், புரிதலையும் பெறுவார்கள்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியானது.

மேலும், பிப்ரவரி 18, இஞ்ஞாயிறு மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், உரோம் நகரின் தென்கிழக்கேயுள்ள அரிச்சா விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், ஆண்டு தியானத்தைத் தொடங்கவுள்ளனர். 

பிப்ரவரி 23, வருகிற வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் இத்தியானத்தில்,  போர்த்துக்கீசிய அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில் தியானச் சிந்தனைகளை வழங்குவார். அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள், கவிஞர் மற்றும், விவிலிய இறையியலாளர். இவர், லிஸ்பன் நகரிலுள்ள போர்த்துக்கீசிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் உதவித் தலைவராவார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டு தியானம் செய்வதைமுன்னிட்டு, பிப்ரவரி 21ம் தேதியன்று, வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை இடம்பெறாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.