சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

குடியேற்றதார தொழிலாளர்கள் நியாயமான முறையில் நடத்தப்பட...

உலக தொழில் நிறுவனப் பொது இயக்குனர் Guy Ryder - AP

20/02/2018 15:41

பிப்.20,2018. பெரும்பாலான குடியேற்றதாரத் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற வேலைகளைச் செய்கின்றனர் என்றும், இத்தொழிலாளர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதற்கு உலக அளவில் நடவடிக்கைகள் அவசியம் என்றும், ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.

பிப்ரவரி 20, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சமூக நீதி நாளை முன்னிட்டு செய்தி வெளியிட்ட, உலக தொழில் நிறுவனப் பொது இயக்குனர் Guy Ryder அவர்கள், மக்களின் குடியேற்றம், தரமான வேலைவாய்ப்புக்களைத் தேடுவதோடு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளது என்று கூறினார்.

“புலம்பெயர்ந்த தொழிலாளர் : சமூக நீதிக்குத் தாகம்”என்ற தலைப்பில், இந்த உலக நாள் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இன்று உலகிலுள்ள 15 கோடிக்கு மேற்பட்ட குடியேற்றதாரத் தொழிலாளரில்,  பெரும்பாலானோர் பாகுபாடுகளையும், வன்முறைகளையும், அடிப்படை பாதுகாப்பு வசதிகளின்மையையும் எதிர்கொள்கின்றனர். இத்தொழிலாளர்களில் ஆண்கள் 56 விழுக்காட்டினர் மற்றும் பெண்கள் 44 விழுக்காட்டினர்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

20/02/2018 15:41