2018-02-23 10:03:00

C9கர்தினால்கள் குழுவின் 23வது சந்திப்பு


பிப்.22,2018. திருத்தந்தையும், திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் ஆண்டு தியானம், திருப்பீடத்தில் உருவாகிவரும், மற்றும் உருவாக வேண்டிய சீர்திருத்தங்களின் ஒரு பகுதியே என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீடத்திலும், வத்திக்கானிலும் மாற்றங்களைக் கொணர்வதற்கு, திருத்தந்தையின் ஆலோசகர்களாகப் பணியாற்றிவரும் 9 கர்தினால்கள் குழுவின் செயலராகப் பணியாற்றிவரும் ஆயர் Marcello Semeraro அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

பிப்ரவரி 26, வருகிற திங்கள் முதல் 28 புதன் முடிய வத்திக்கானில் நிகழவிருக்கும் 9 கர்தினால்கள் குழுவின் 23வது சந்திப்பைக் குறித்து தன் பேட்டியில் குறிப்பிட்ட ஆயர் Semeraro அவர்கள், வத்திக்கான் துறைகளில் நிகழ்ந்துவரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய Pastor Bonus என்ற திருத்தூது சட்டவரைவு, இந்தச் சந்திப்பிலும் தொடர்ந்து விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

சீர்திருத்தங்கள், உள்ளுணர்வுகளின் அசைவுகளிலிருந்து உணரப்பட வேண்டும் என்று புனித லொயோலா இஞ்ஞாசியார் கூறியுள்ளதை, திருத்தந்தை, வத்திக்கான் சீர்திருத்தங்களிலும் கொணர விழைவதால், தற்போது நடைபெற்றுவரும் தியானமும் வத்திக்கான் சீர்திருத்தங்களின் இன்றியமையாத பங்கு என்று, ஆயர் Semeraro அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாக குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.