சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

மறையுரையாளர் பில்லி கிரகாம் - இறுதி மரியாதைகள்

Capitol Rotunda எனுமிடத்தில் மக்களின் வணக்கத்திற்காக பில்லி கிரகாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ளது - REUTERS

01/03/2018 15:31

மார்ச்,01,2018. பிப்ரவரி 21, தன் 99வது வயதில் இறையடி சேர்ந்த கிறிஸ்தவ மறையுரையாளர் பில்லி கிரகாம் அவர்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் உட்பட, பல அரசு அதிகாரிகளும், மக்களும், பிப்ரவரி 28, இப்புதனன்று, தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

பில்லி கிரகாம் அவர்களின் உடல், வாஷிங்க்டன் நகரின் Capitol Rotunda எனுமிடத்தில் மக்களின் வணக்கத்திற்காக, பிப்ரவரி 28, மற்றும் மார்ச் 1 ஆகிய இருநாட்கள் வைக்கப்பட்டிருந்தது.

'அமெரிக்காவின் மேய்ப்புப் பணியாளர்' என்று அறியப்படும் பில்லி கிரகாம் அவர்கள், Harry Truman முதல், Donald Trump முடிய, 13 அரசுத் தலைவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்துள்ளார் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

21 கோடிக்கும் அதிகமானோரை, தன் மறையுரைகளால் கவர்ந்துள்ள பில்லி கிரகாம் அவர்களின் உடல், அவர் பிறந்த இடமான Charlotteல், மார்ச் 2ம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

01/03/2018 15:31