2018-03-08 15:50:00

அனைத்துலகப் பெண்கள் நாள் - திருத்தந்தையின் டுவிட்டர்


மார்ச்,08,2018. மார்ச் 8, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலகப் பெண்கள் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் அனைத்துப் பெண்களுக்கும் தன் நன்றியைக் கூறும் வண்ணம், ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"மனிதாபிமானம் மிகுந்த, வரவேற்கும் பண்புகொண்ட, சமுதாயங்களைக் கட்டியெழுப்ப, ஒவ்வோரு நாளும் முயன்றுவரும் அனைத்துப் பெண்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், குழந்தைகள் நலனுக்கென இத்தாலியில் பணியாற்றிவரும், யுனிசெஃப் அமைப்பு, அனைத்துலகப் பெண்கள் நாளையொட்டி, "ஒவ்வொரு பெண் குழந்தையும் எதிர்காலம்" என்ற பெயரில், காணொளி குறும்படம் ஒன்றை .வெளியிட்டுள்ளது.

7 வயது முதல் 53 வயது வரை உள்ள 8 பெண்கள், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளில் எவ்விதம் நம்பிக்கையுடன் போராடினர் என்பதை இந்தக் குறும்படம் விளக்குகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.