2018-03-08 15:54:00

இளையோர் வடிவமைக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை


மார்ச்,08,2018. இவ்வாண்டு புனித வெள்ளியன்று நடைபெறும் சிலுவைப்பாதையை வடிவமைக்கும் பொறுப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இளையோர் குழுவிடம் ஒப்படைத்துள்ளார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் அறிவித்துள்ளார்.

மத இயல், மற்றும் சட்டங்கள் கற்பித்துவரும் பேராசிரியரும், எழுத்தாளருமான ஆந்திரேயா மோந்தா (Andrea Monda) என்ற பெண்மணியின் வழிநடத்துதலுடன் இளையோர் உருவாக்கும் செபங்கள், மார்ச் 30, புனித வெள்ளியன்று, பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், புனித வெள்ளியன்று, இரவு 9 மணியளவில், உரோம் நகரின் மறைசாட்சிகள் நினைவிடமான, கொலோசெயம் திடலில் நடைபெறும் சிலுவைப்பாதையை, திருத்தந்தையர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

மேலும், புனித பூமி மற்றும் அரேபிய பகுதிகளில் பணியாற்றும் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், வத்திக்கானில் மேற்கொண்டுள்ள 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, மார்ச் 8, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.