2018-03-09 14:30:00

இமயமாகும் இளமை..: ஒரு சிறு பொறி போதும், முட்புதர்களை அழிக்க‌


2006ம் ஆண்டிலேயே இந்தியாவில் பால்ய திருமணங்கள் கடுமையான சட்டங்களின் துணையோடு தடைச் செய்யப்பட்டாலும், இன்றும் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனப்பகுதி கிராமங்களில் இளவயது திருமணங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. ஹுசாங்சார்  என்ற கிராமத்தின் பிரீதி என்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டபோது, அவரின் வயது 10. அழுது புரண்டார் அந்த மாணவி. தான் படித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தால் தன் கணவரின் வீட்டிற்கு செல்ல மறுத்தார். தன் மகளின் பிடிவாதத்தை மாற்றமுடியாத அவரின் பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி, சில ஆண்டுகளுக்குப் பின் தங்கள் மகளை அனுப்பி வைப்பதாக கெஞ்சி அனுமதிப் பெற்றனர். இந்த நேரத்தில் அந்த சிறுமியின் துணைக்கு வந்தது உர்முள் என்ற அமைப்பு. பால்ய திருமணங்களை எதிர்த்தும், பெண் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வரும் இந்த அமைப்பு, பிரீதிக்கு பக்க துணையாக நின்றதுடன், இராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, நாட்டுப்புறக்கலைகள் வழியாக விழிப்புணர்வை ஊட்டியது. இன்றோ, ஹுசாங்சார் கிராமத்திற்கு பக்கத்திலுள்ள 178 கிராமங்களின் மக்கள் ஓர் உறுதிமொழியை முன்வந்து எடுத்துள்ளனர். ‘பால்ய திருமணங்களை தடுப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம்’என்ற உறுதிமொழியே அது. 35 விழுக்காட்டு சிறுமிகள், 18 வயதிற்குள்ளேயே திருமணம் எனும் உறவுக்குள் தள்ளப்படும் இராஜஸ்தானில், பிரீதா கல்வி மீது கொண்ட தாகம், நல்ல மாற்றத்தை உருவாக்கி வருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.