2018-03-13 15:37:00

கென்ய அரசுத்தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு மகிழ்ச்சி


மார்ச்,13,2018. கென்யாவில், அரசுத்தலைவர் Uhuru Kenyatta அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர், Raila Odinga அவர்களும், எதிர்பாராத நேரத்தில் சந்தித்து உரையாடிருப்பது குறித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.

இச்சந்திப்பு குறிப்பு பீதேஸ் செய்தியிடம் பேசிய கத்தோலிக்கர், கென்யாவில் அமைதி நிலவ வேண்டுமென்று, கத்தோலிக்கரும், ஏனைய கிறிஸ்தவர்களும் உருக்கமாகச் செபித்துவந்தோம், இத்தவக்காலத்தில் இச்சந்திப்பு நடந்திருப்பது, மிகவும் மகிழ்வை அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

எங்களின் செபம் கேட்கப்பட்டுவிட்டது என்றும், உண்மையிலே இது ஒரு புதுமை என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ள கென்ய கத்தோலிக்கர், உறுதியான மற்றும் ஒன்றிணைந்த கென்யாவைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு, இவ்விரு தலைவர்களும் இசைவு தெரிவித்துள்ளனர் என்றும் கூறினர்.

கடந்த சனவரி 30ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர், Odinga அவர்கள், தன்னை மக்களின் தலைவர் என அறிவித்து, அரசுத்தலைவர் Kenyatta அவர்களுக்கு சவால் விட்டதைச் சுட்டிக்காட்டிய அருள்சகோதரி Jecinter Okoth அவர்கள், இவ்விரு காளைகளும் சண்டையிட்டால், புல்களே துன்புறும், ஒருவர் தோல்வியுற்று, அவை சண்டையை நிறுத்தினாலும், புல் வளரத் தொடங்கும் என்றார்.

ஆதாரம் : Fides/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.