2018-03-14 15:45:00

திருத்தந்தையைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு ஒரு நூல்


மார்ச்,14,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப்பணியில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதன் நினைவாக, ‘A Pope Francis Lexicon’ அதாவது, 'திருத்தந்தை பிரான்சிஸ் பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு' என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பம், பொதுநிலையினர் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள், உரோம் நகரில் உள்ள இயேசு சபை தலைமையகத்தில் இந்நூலை வெளியிட்டபோது, திருத்தந்தையை சரிவரப் புரிந்துகொள்ள விரும்பும் எவரும் இந்நூலை படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Cindy Wooden மற்றும் Joshua McElwee என்ற இரு எழுத்தாளர்கள் தொகுத்துள்ள இந்நூலுக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களும், பாஸ்டன் பேராயர், கர்தினால் Sean Patrick O'Malley அவர்களும் அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

கர்தினால்களான லூயிஸ் அந்தோனியோ தாக்லே, Donald Wuerl, மற்றும் Oscar Rodriguez Maradiaga ஆகியோர் உட்பட, வேறு பல பத்திரிகையாளர்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள், 54 கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

‘Vocabolario di Papa Francesco’ அதாவது, ‘திருத்தந்தை பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில், இத்தாலிய மொழியில் வெளியான ஒரு நூல், இந்நூல் உருவாகக் காரணமாக அமைந்தது என்று இந்நூலைத் தொகுத்த, Joshua McElwee அவர்கள் Zenit செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.