சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

நம்பிக்கையை விதைப்பவர்கள் – திருத்தந்தையின் வாழ்த்து

திருத்தந்தை பிரான்சிஸ் - AP

15/03/2018 15:53

மார்ச்,15,2018. Familia Grande del Hogar de Cristo அதாவது, ‘கிறிஸ்துவின் இல்லத்தைச் சேர்ந்த பெரிய குடும்பம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் 10வது ஆண்டு நிறைவை  அண்மையில் கொண்டாடியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினருக்கு, காணொளி வடிவில், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

நம்பிக்கை தரும் நல்வழியில் இளையோரை அழைத்துச் செல்லும் இவ்வமைப்பினர், தங்கள் பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் தொடர வேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

இப்பணியில் இணைந்துள்ள அனைவரும், நம்பிக்கையை விதைப்பவர்கள் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தடைகள் பல வந்தாலும் மனம் தளராமல் முன்னேறுமாறு இவ்வமைப்பைச் சார்ந்தவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டில் இயங்கி வரும் Familia Grande del Hogar de Cristo அமைப்பு, அண்மையில், Luján எனுமிடத்தில் அமைந்துள்ள மரியன்னை திருத்தலத்தில், தங்கள் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருந்த இளையோருக்கு நல்லதொரு வாழ்வை உருவாக்கும் நோக்கத்தில், சிலே நாட்டைச் சேர்ந்த இயேசு சபை புனிதர் அல்பெர்த்தோ ஹுர்தாதோ (Alberto Hurtado) அவர்கள், 1944ம் ஆண்டு, Hogar de Cristo என்ற அமைப்பை உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

15/03/2018 15:53