சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

இந்தியாவில், ஏப்ரலை, 'தலித் வரலாற்று மாதமாக’க் கொண்டாட...

தலித் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளைக் கண்டனம் செய்து மும்பையில் நடந்த ஊர்வலம் - AFP

22/03/2018 15:07

மார்ச்,22,2018. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தை, 'தலித் வரலாற்று மாதம்' என்று சிறப்பிக்க, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

தலித் மக்களின் விடுதலைக்காக போராடி, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூர, ஏப்ரல் மாதம் தகுந்ததொரு தருணம் என்று, இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழு, மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வரலாற்று மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தோரின் வாழ்க்கை குறிப்புக்களை இப்பணிக்குழுவினருக்கு மார்ச் 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில், 20 கோடியே 10 இலட்சம் பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் வாழும் தலித் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 இலட்சம் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

22/03/2018 15:07